பொன்மொழிக்கு விளக்கம் தெரியுமா உங்களுக்கு?
"தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது. பொன் ஒன்றுக்குத்தான் இத்தகைய பாதுகாப்பு உண்டு. அதன் மதிப்பு மாறுபடலாம். பெரு நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஓர் அவசரம் எனில், என்று வேணுமானாலும் விற்றுக் காசாக்கலாம் அல்லது அடகு வைத்துக் கடன் பெறலாம்.
அதனால்தான் என்றும் நிலைத்திருக்கக் கூடிய உண்மைகளுக்குப் ‘பொன்மொழிகள்’ என்று பெயர் வைத்தார்கள். அவற்றின் மதிப்பு என்றும் மாறுபடுவதே கிடையாது."
கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் சுகி. சிவமின் ‘ஞான மலர்கள்’ என்ற தொகுப்பில் கல்கி ராஜேந்திரனின் அணிந்துரையிலிருந்து எடுக்கப்பட்டது.

4 கருத்துகள்:
வணக்கம் அண்ணா,
சிறபானா கட்டுரை.
//தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.//
தவறான கருத்தாக இருக்கிறதே... தங்கத்தின் மதிப்பு குறையாது என எப்படி சொல்ல முடியும்... குறை என்பது குறைபாடு அல்லது அளவு என கொள்ளலாம். நீங்கள் 1 கி.கி தங்கம் வாங்குகிறீர்கள். அதில் 0.1 கி.கி குறைபடுகிறது என வைத்துக் கொள்ளுங்கள், அதன் மதிப்பு சமமானதா? 0.9 கி.கி 1.0 கி.கி விட குறைவானதே அப்படி இருக்க அதன் மதிப்பு குறைகாணாது என ஏற்றுக் கொள்வீர்களா...
தங்கமும் பூமியில் விளையும் கணிமங்களில் ஒன்று தான். அதற்கு மதிப்பு கொடுத்து இன்றய நிலையில் அதை உயரிய இடத்திற்கு கொண்டுச் சென்றுள்ளது மனித இனமே...
[prakashvasi] வணக்கம் தம்பி, நன்றி.
[VIKNESHWARAN] //தங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது.//
இது சரியான கருத்து.
பொதுவாக இன்று, தங்கத்தின் மதிப்பு (Value) அதன் விலையில்தான் (price) நிர்ணயிக்கப்படுகிறது. அதை தவிர தங்கத்திற்கு சில சிறப்பான மருத்துவ குணங்களும் உள்ளதாக படித்திருக்கிறேன். இந்த கருத்துக்களை உள்ளடக்கிய வரிகள்தான் அது.
//நீங்கள் 1 கி.கி தங்கம் வாங்குகிறீர்கள். அதில் 0.1 கி.கி குறைபடுகிறது என வைத்துக் கொள்ளுங்கள், ...//
இப்படி வைத்துக்கொள்ள முடியாது. 0.1 கி.கி = 100 கி தங்கத்தின் எடை குறைந்து வாங்கும் அளவிற்கு நான் ஏமாற மாட்டேன். காரணம் 100 கி தங்கத்தின் இன்றைய மதிப்பு RM10,300.00 :)
கருத்துரையிடுக