ஆங்கில நாள்படி, இன்று (11/12), மகாகவி பாரதியார் இப்பூவுலகில் அவதரித்த பொன்னாள். 11/12/1882-ல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டையபுரத்தில், திரு. சின்னசாமி ஐயர் மற்றும் இலக்குமியம்மாள் அவர்களுக்கு சுப்பிரமணியனாகப் பிறந்தார்; சுப்பையாவாக செல்லப்பெயரில் வளர்ந்தார்; எட்டையபுர மன்னரால் பாரதியாக வாழ்ந்தார்; மகாகவியாக மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.
பாரதி தன்னை தானே மிகவும் துள்ளியமாக இப்படி சாட்சிப்படுத்துகிறார்:
பாரதி தன்னை தானே மிகவும் துள்ளியமாக இப்படி சாட்சிப்படுத்துகிறார்:
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
(சுயசரிதையில் 49-வது கண்ணி)
இம்மனமுதிர்ச்சியை அவரிடமிருந்து நாம் அவசியமாக கற்றிடல் வேண்டும்.
இந்த அதிசயப் பிறவி இவ்வுலகுக்கு கொடுத்த கவிதைகள் யாவும் அவரின் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடே. அவை அனைத்தும் சாகாவரம் பெற்றவை. இன்றும் அவரின் கவிதைகளும் கட்டுரைகளும் இன்றைய நம் வாழ்வியலுக்கு ஏற்புடையதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றன.
மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு என்னால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு, என் கனிணி முகப்பில் பதித்த படத்தை (Wallpaper) உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
வாழ்க பாரதி!
இந்த அதிசயப் பிறவி இவ்வுலகுக்கு கொடுத்த கவிதைகள் யாவும் அவரின் புரட்சிகரமான சிந்தனையின் வெளிப்பாடே. அவை அனைத்தும் சாகாவரம் பெற்றவை. இன்றும் அவரின் கவிதைகளும் கட்டுரைகளும் இன்றைய நம் வாழ்வியலுக்கு ஏற்புடையதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றன.
மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு என்னால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு, என் கனிணி முகப்பில் பதித்த படத்தை (Wallpaper) உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
வாழ்க பாரதி!
படத்தை சொடக்கி பதிவிறக்கம் செய்யவும்.
23 கருத்துகள்:
endrenrum en mundaasu veera tamilan ninaivugalum avan eluthiye kavithaigalum vaalgha.
vaalgha valamudan...
[theshananth vaduveloo] உங்கள் கருத்துக்கு நன்றி.
பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு, முடிந்தளவு நாம் அவரின் 'Wallpaper'-ஐ நம் கனிணியில் பதித்துக்கொள்வோம். நன்றி.
நாம் பாரதியை மறக்கமுடியாது..அவரின் தமிழ் சேவைகள் கணக்கில்லடங்கா....ஒரு நிமிடம் அவரை நினைத்து...அவரின் ஒரு கவிதையை நினைத்து ....wall paper-ஐ பதித்து...நினைவு கொள்வோம்
[மூர்த்தி] உங்கள் கருத்துக்கு நன்றி. வாழ்த்துக்கள்!
வணக்கம்,
என்பு அண்ணா.
பார்புகழ் பாரதியே நீ பிறந்த குலம் தூற்றினாலும் தாய் தமிழை பேண முளைத்த கர்பகவிருட்சம் நீ. எட்டையபுர கவியரசே உன் புரட்சியால் இன்று பெண்ணினமே சீர்பெற்று உள்ளது.
தமிழ் இனத்திற்கே கிடைக்க பெறாத
பொக்கிஷமே உமது தமிழ் படைப்புகளோ பத்து இரகசிய காப்பகத்தில்.
பாரதிப் புலவனை நினைவுகூர்ந்தது மகிழ்ச்சிக்குரியது.
கணினி முகப்புப்படம் நன்று.
மரித்து போனது பாரதி மட்டுமே..பார'தீ' அல்ல.
பகிர்வுக்கு நன்றிங்க :-)
பாட்டுக்கொரு புலவன் பாரதியை நினைவுக்கூர்ந்து எழுதியிருக்கும் உங்களுக்கு முதலில் என் பாராட்டுகள்.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் பாரதியைப் போன்ற தமிழ்ச்சான்றோர்களை மறக்காமல் இருப்பது நல்ல செய்தி.
பாரதியைப் போல், இன்னும் அறிஞர் பலரைப் பற்றி தொடர்ந்து எழுதுங்கள் மு.வேலன் அவர்களே..!
வணக்கம்.இன்றைய தினத்தை (மகாகவி பாரதியை) நினைவுகூர வைத்தமைக்கு நண்பர் வேலன் அவர்களுக்கு நன்றி.
கவிதையாகவே வாழ்ந்தவன் பாரதி! அந்த கவிப்பயணம் 39 ஆண்டுகளில் முற்றுப் பெற்றது தமிழுக்கு பேரிழப்பு.
என்னை மிகவும் கவர்ந்தவை;
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ?
பாரதி புகழ் என்றென்றும் ஓங்குக,நன்றி.
[prakashvasi] அந்த பத்து இரகசிய காப்பகத்தை பற்றி தெளிவாக கூறவும். நன்றி.
[அ நம்பி] நன்றி ஐயா.
[இனியவள் புனிதா] உங்கள் வருகைக்கு நன்றி.
[சு.விக்னேஸ்வரன்] நண்பா, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
//கவிதையாகவே வாழ்ந்தவன் பாரதி! அந்த கவிப்பயணம் 39 ஆண்டுகளில் முற்றுப் பெற்றது தமிழுக்கு பேரிழப்பு.//
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
தமிழகத்தில் பிறந்ததால் தனக்குக் கிடைக்க வேண்டிய புகழ் முழுதும் கிடைக்காமல் மடிந்த மகா கவிஞன் பாரதி.
பதிவுக்கு நன்றி!
எனக்கு பிடித்த இந்த பாரதி கவிதையை படமாக்கி தருக நன்றி
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
[ரமணன்...] உண்மை.
[சுப.நற்குணன் - மலேசியா] உங்கள் ஆசிக்கு நன்றி.
[பரிசல்காரன்] இனி அவர் புகழ் ஓங்குக உலகமெல்லாம்.
[jak] உங்களுக்குப் பிடித்த பாரதி கவிதை படமாக்கப்பட்டு விட்டது. வாழ்த்துக்கள்!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
என்ற பாரதியின் நெஞ்சுரத்தை யாவரும் பெறுவோம். நல்லதோர் இடுகை வழங்கியமைக்கு பாராட்டுகிறேன்.
[ஆய்தன்] மகிழ்ச்சி. நன்றி.
நல்ல நினைவுகூறல்!!! wall paper நன்றாக உள்ளது:-):-)
[கபீஷ்] நன்றி.
Vanakkam.
Barathiyin kavithaikalai paditthu valarnthavan naan. Ungkal kaddurai paditthu mikuntha anantham adainthen. Athe pool ungkal e-mail mugavari kidaikkumaa?
Mathialagan...
mathi07@oum.edu.my.
Nanri.
[Tamil Usi] மகிழ்ச்சி. என் மின்னஞ்சல் முகவரியை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன்.
தயவு செய்து கீழ்கண்ட வலைப்பதிவுக்குச் சென்று உலாவவும்...
http://nyanabarati.blogspot.com/
உங்களுக்குப் பிடித்தமான பல தகவல்கள் அங்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
வணக்கம்,
நல்ல பதிவு. பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் கவிதைகளைப் புனைவதில் பிரசித்திப்பெற்றவர் மகாகவி பாரதியார். அவரது கவிதைகள் அனைத்தும் அருமை...இப்படியொரு கவிஞரைப் பெற்றெடுக்க தமிழ்மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
[து. பவனேஸ்வரி] நன்றி.
//இப்படியொரு கவிஞரைப் பெற்றெடுக்க தமிழ்மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!//
ஆம், உண்மையிலே நாம் புண்ணியம் செய்திருக்கிறோம்.
Nice post...
Download Bharathiar songs Mp3
http://chinathambi.blogspot.com
கருத்துரையிடுக