பொறுபற்ற ஒரு சொல் சச்சரவை ஏற்படுத்தும்.
குரூரமான ஒரு சொல் ஒரு வாழ்வை சிதைக்ககூடும்.
ஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஒரு முரட்டுச்சொல் மரணத்தை உண்டாக்கலாம்.
ஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம்.
ஒரு மகிழ்ச்சியான சொல் நாளையே வெளிச்ச மாக்கலாம்.
ஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம்.
ஒரு அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசீர்வதிக்கலாம்.

அருமையான அழுத்தமான இந்த வரிகள், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்களின் ‘ஏழாவது அறிவு’ (மூன்றாம் பாகம்), 96-ம் பக்கம், ‘சொல்’ என்ற கட்டுரையில் படித்தது.
‘சொல்’, எச்சரிக்கையாக ஒரு சொல்லாளுதலைப் பற்றிய கட்டுரை. ஒரு சொல்லை தவறாக சொல்லும்போதும், தவறாக எழுதும்பொழுதும் ஏற்படும் பின்விளைவுகளை, சில குட்டிக்கதைகளுடன் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார், வெ. இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்கள்.
சொல்லின் ஆளுமையைச் செழிமையாய், பல அதிகாரங்களாய் படைத்திருக்கும் வள்ளுவர், குறிப்பாக 72-ம் அதிகாரமான அவை அறிதலில், 711-வது குறளை இப்படி பாடுகிறார்;
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.
இதற்கு டாக்டர் மு.வரதராசனார், சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்ற சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்று தெளிவுரையிட்டிருக்கின்றார்.
அவை அறிதல், மட்கட் குலத்தின் வாழ்வியலில் எவ்வளவு ஒரு முக்கிய அங்கம் என்பதனை கடந்த 5/11/2008-ல் கூடிய மலேசிய திருநாட்டின் மக்களவையே சான்று! ஆம், பாசிர் சாலாக் (Pasir Salak) மக்களின் பிரதிநிதியும் ஆளுங்கட்சியின் மக்களவை உறுப்பினருமான டத்தோ தாஜுடின் அப்துல் ரஹ்மான் (Datuk Tajuddin Abdul Rahman) மக்களவையில், ஈப்போ பாராட் (Ipoh Barat) மக்களின் பிரதிநிதியான எம். குலசேகரனை ‘Bloody Bastard’ என்று இழிந்திட்ட இந்த இழிச்சொல், மலேசிய மக்களின் பலரையும் (என்னையும் உட்பட) புண்படுத்தி முகம் சுழிக்கச் செய்தது.
பார்க்க: http://www.themalaysianinsider.com/index.php/malaysia/11861-bastard-in-the-house
மற்றும் http://www.malaysiaindru.com/?p=6925
ஒரு தலைவனை பற்றி சிறிது சிந்திக்கும்பொழுது, திருவள்ளுவர் சொல்வதுபோல்,
அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. (குறள் 635)
அதாவது, அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்; நல்ல தலைவனாவான் என்பதே அக்குறளுக்கு பொருளாகும்.
வள்ளுவன் கூறும் நற்பண்பிலிருந்து விலகி விலங்காய் அவதரித்திருக்கும் சில மக்கட் தலைவர்களை நினைக்கும்பொழுது ஏற்படும் வேதனையைவிட, அப்படிப்பட்ட தலைவர்களையே நம்பியிருக்கும் மக்களை நினைத்தால்தான் வேதனை ஒரு படி அதிகமாகிறது!
இழிச்சொல்லை பயன்படுத்தியவனின் சாவு எப்படி ஈனமாக இருக்கும் என்பதனை மீசைக்கார பாரதி, தன் பாஞ்சாலி சபதத்தில் ‘வீமன் செய்த சபதம்’ மூலமாக கவிதையாய் வடித்திருக்கின்றான். சற்று இந்த கவிதையைப் படித்தபடி, சொல்லைப் பற்றிய சிந்தனையில் நுழைவோம்...

வீமன் செய்த சபதம்
வீமனெழுந் துரைசெய் வான்;-‘இங்கு
விண்ணவ ராணை, பரா சக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான்-மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை
மாமகளைக் கொண்ட தேவன்-எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை
காமனைக் கண்ணழ லாலே-சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடிமீதில்
ஆணையிட் டிஃதுரை செய்வேன்;-இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை
பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள்
பெண்டு திரெளபதியைத் தொடைமீதில்
நாணின்றி ‘வந்திரு’ என்றான்-இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே-என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,
தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்;-அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,
நடைபெறுங் காண்பி ருலகீர்!-இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது
சாதனை செய்க, பராசக்தி’ என்றான்.
11 கருத்துகள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (191)
சிறப்பான கட்டுரை... எண்ணங்களின் வடிவமே வார்த்தைகளாக உதிர்கின்றது... நல்லவற்றை பேசுவது சான்றோர் சிறப்பு..
இனிய உலவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று...
Nalla pathivu...
mr.velan,you shud know that mr.kulasegaran doesnt know how to speak in parliament with decorum. the problem with indians like you are that just because kulasegaran is an indian ,you want to support him. this is not good for our society. it also shows that indians arent brave eneough to critise a fellow indian MP when he is wrong. anyway, bloody bastard in english has a much different meaning. it means stupid, idiot,trouble maker etc.
the main problem with indians esp working class indians today are that they have been conned by our fellow indian leaders. the upper class and upper caste indians in politics and indian lawyers practise caste discrimination. we are talking with some MPs to pass a caste relations act in parliament to outlaw caste discrimination in public institutions like temples, tamil schools etc.
[krishna] First of all did you read and understood what I have written? First, please understand what Thiruvalluvar and Subramania Bharati said in their scriptures. For your kind information, I am not supporting anyone nor any party in this ‘Bastard’ (Anak Haram) issue. Maybe you are not getting a clear interpretation on the word ‘Bastard’. Please refer the following link http://dictionary.reference.com/browse/bastard. It is one of the most sarcastic words to hear regardless of race and as a MP of should not utter those kind a word in Parliment. The worst part is people like yourself is defending and encouraging this kind of uncivilized attitudes. Do you condole such acts?
முதலில் நீங்கள் என் பதிவை நன்றாக படித்தீர்களா? திருவள்ளுவரும் மகாகவி பாரதியும் என்ன கூறுகிறார்கள் என்று சிந்தித்தீர்களா? இடம், பொருள், ஏவல் அறிந்து சொல்லை பயன்படுத்துவதையும் அதன் பின்விளைவுகளையும் சிறிது அலசி பார்த்தீர்களா? யாராக இருப்பினும், அந்த கடுமையான சொல்லை உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் மலேசிய மக்களவையில் பயன்படுத்தியது சரியா?
உங்கள் கூற்று தவறு! அவை-நாகரிக்கத்தில் சொல்லாடுதலைப் பற்றியது இந்த பதிவு. இதில் யாரையும் சார்ந்து நான் பேசவில்லை. நாளிதழில் படித்தப்பின் சொரணையுள்ள ஒரு சராசரி மலேசிய இந்திய தமிழனின் மன பாதிப்பின் பதிவு இது.
நன்றி.
A very good explanation by Velan. He is right when he said, the "interpretation" of words utter by Mr. Krishna. Maybe he didnt get it right of the definition of "Bastard".
In this case, its not about the indian aspect nor the support towards them was touched on, but the vulgarity of such words used in the parliment towards another fellow collegue and a MP.what does this reflect on?
Moving ahead we should never condole such acts of immaturity as we are much more civilized and educated. Pardon me, the world is big and it has bigger problem to deal with besides this......
வணக்கம்.
சொல்லின் வல்லமை அளப்பெரியது என்பதை பாரதி மற்றும் திருவள்ளுவரின் கூற்றிலிருந்து அறிகிறோம்.இருப்பினும் பொறுப்பில் அமர்ந்திருக்கும் படித்த அரசியல்வாதிகளே பொறுப்பின்றி, பின் விளைவுகளைச் சிறிதும் யோசிக்காது வார்த்தைகளை அள்ளி வீசுவதை இக்கலிகாலத்தில் காண முடிகின்றது.கொட்டிய வார்த்தைகளைத் திரும்பவும் அள்ள முடியாது. அது தெரிந்திருந்தும் பேசுவதையெல்லாம் பேசிவிட்டுப் பின்னர் மன்னிப்பு கேட்கும் புதிய போக்கொன்றை இன்றைய அரசியல் தலைவர்கள் கையாளுவதை உணர முடிகின்றது. ஒரு தலைவரே இன்னொரு தலைவரின் மீது மரியாதை அற்ற சொற்களை உபயோகிப்பது வேதனைக்குரியது. அவ்வாறு பேசிய தலைவர்களுக்கும் சிலர் ஆதரவு தெரிப்பது அவமானத்திற்குரியது.மற்றவர்களை மதிக்கத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவமானப்படுதாமலாவது இருக்கலாம் அல்லவா?
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு
vanakam sagothara,
umathu karuthu niraintha kadurai miga sirapaga irunthathu.
oru vaakiyathirku adipadaiyaga amaivathu solley aagum.
appadi patta sollai idam arinthu pesuvathuthan salla siranthathu. nagarigam adaintha oru samuthayathirku sandru aagum.
entha enna tharapu kutranm seythathu endru vittu vittu peschu nagarigathai pattri aaraivoom
aga.
Nam sangaillakiyathilum silapathikarathilum kanapadum sollu nagarigathai patri paarpoom.
uthaarnamaaga mathavi kovalanuku elluthiya kadiyam 7 kaditham madrum mozhi panbinay adipadaiyaaga kondu vadikka pattu iranthathu. elluthu maddrum indri ellutha koodiya ilaikooda panbu maraiyay pirathibalika veendum endru thalam ilaiyai thervu seythal.
oru nadduaala mandra urupinar athuvoom naduarinthavar, palludagathin thakatin ullavar pesa vendiya solla ithu. entha sollai patri sari endru vakkalathu vera sila mozhi madaiyargal. angilathil Bastard andra solluku muthal porul vesiyil magan allathu magal aagum allathu vazhithavariya muraiyil pirantha kulanthai ennalam.
ippadi patta soll eppadi sariyaagum? sinthithu seyal padungal
அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி.
[து. பவனேஸ்வரி]//கொட்டிய வார்த்தைகளைத் திரும்பவும் அள்ள முடியாது.//
அருமையான கூற்று.
[rajesh]//Pardon me, the world is big and it has bigger problem to deal with besides this......//
You are right.
[premvasigaran]//sangaillakiyathilum silapathikarathilum kanapadum sollu nagarigathai patri paarpoom//
நல்ல தகவல். குறித்துக் கொள்கிறேன். நன்றி.
இந்த பதிவைச் சார்ந்த இன்றைய தி மலேசியன் இன்சைடரில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்:
http://www.themalaysianinsider.com/index.php/malaysia/12218-sound-and-fury-in-parliament
a very good blog with a wonderfull topic...
umathu sevai naatirku thevai !!!
VALTHUKKAL.
[ravi]நன்றி. உங்கள் சேவையும் இந்த நாட்டிற்கு, இந்த பதிவலைக்குத் தேவை.
கருத்துரையிடுக