வியாழன், 20 நவம்பர், 2008

அமைதியான ஓய்வில் எம்.என்.நம்பியார்


தமிழ்திரையுலக ஜாம்பவான்களில் ஒருவர், பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார் நேற்று (19/11/2008) சென்னையில் காலமானார். இந்திய திரையுலகில் அவர் ஒரு சகாப்தம். சில படங்களின் கதாநாயகராக வலம் வந்தாலும், வில்லன் கதாபாத்திரமே அவரை சிகரத்தின் உச்சிக்கு கொண்டுபோய் நிருத்தியது.

அவரின் நடிப்பை மிகவும் இரசித்துப் பார்க்கும் பல கோடி இரசிகர்களில் நானும் ஒருவன். அப்படி சிறுவயதில் நான் கண் சிமிட்டாமல் இரசித்ததில் குறிப்பிடத்தக்கது, அன்னாரும் எம்.ஜி.ஆரும் (MGR) வாள்சண்டைப் புரியும் காட்சிகள். என்ன நடிப்பு!


என்றும் காலத்தால் அழியாத நடிப்பை வழங்கிய அன்னாருக்கு நன்றி. என்னென்றும் என் நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த வலைப்பதிவில் ஓர் அஞ்சலி.

http://www.indiaglitz.com/channels/tamil/article/43122.html
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2315&cls=row3
http://www.hindu.com/2007/03/15/stories/2007031518020200.htm

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்தவர்; நம்பியார் அவர்களின் ஆன்மா அமைதி அடையட்டும்.

மு.வேலன் சொன்னது…

நல்ல ஆன்மீகவாதியும் கூட.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

தமிழ்மாறன் சொன்னது…

பழப்பெரும் நடிகருக்கு தாங்கள் நினைவாஞ்சலி செய்திருப்பது பாராட்டுக்குரியது.தமிழரல்லதவராயினும் தமிழை செம்மையாக உச்சரிக்கும் நம்பியார் செயல் ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டிய பாடம்.