ஞாயிறு, 9 நவம்பர், 2008

முதல் முதலாய்...

நேற்று, 8/11/2008 சனிக்கிழமை, பங்சாரில் உள்ள பங்சார் சீவூட் கார்டன் ரெஸ்டாரனில் (Bangsar Seafood Garden Restaurant), ஒரே நிறுவனத்தில் பணி புரியும் சக தொழிலாளர், கெல்வின் கோங்கின் (Kelvin Kong) திருமண விருந்துபசரிப்பில் கலந்துக்கொண்டேன். நான் முதல் முதலாய் கலந்துக்கொள்ளும் சீன திருமண விருந்து; நல்ல மகிழ்ச்சியான அனுபவம்.

அங்கு நான் முதல் முதலாய், நின்றுகொண்டு கலக்கும் நகைச்சுவையை (Stand-up Comedy) நேரடியாக பார்த்து இரசித்தேன்; வாய்விட்டுச் சிரித்தேன். நல்ல மகிழ்ச்சியான அனுபவம்.

சுமார் 30 நிமிடங்களாக ஒரு அருமையான நகைச்சுவை படைப்பைப் படைத்தவர் மோன்தி (Monti) என்ற வ்ஓங் முன் தோ (Fong Mun Toh). அவர் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் செய்தார். அதில் ஆழமாக என்னில் பதிந்து சிந்திக்க வைத்த ஒன்று:

“My friend was asked me, why you voted Teresa Kok; Because she is Chinese? NO, I said. I voted her because I am a Chinese.”

அதாவது, தெராசா கோக்வுக்கு ஏன் வாக்களித்தீர், அவர் சீனராக இருப்பதாலா? என்று மோன்தியின் நண்பர் அவரை பார்த்து கேட்டாராம். அதற்கு அவர், இல்லை, அவர் சீனராக இருப்பதினால் அல்ல, நான் சீனராக இருப்பதினால்தான் என்று கூறியினாராம்.

திருமண விருந்தில் வயிற்றுகுக்கூட அல்ல, சிந்தனைக்கும் உணவு பரிமாறப்பட்டது. திருமண தம்பதிகளுக்கு நன்றி.

மோன்தியும் திருமண தம்பதிகளும்:

16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Nice one!!

பெயரில்லா சொன்னது…

அவருக்கு நகைச்சுவை உணர்வு மிகுதி; சுவையாகச் சொல்லுவதிலும் வல்லவர். எல்லாராலும் இவ்வாறு சொல்ல இயலாது. பலரின் பாராட்டுதல்களையும் பெற்றிருப்பாரே?

மு.வேலன் சொன்னது…

[இனியவள் புனிதா] நன்றி.

[அ. நம்பி] உண்மைதான். அவரைப் பற்றி நேற்றுதான் எனக்கு தெரிய வந்தது. அவரை பற்றி உங்களுக்கு முன்னதாகவே தெரியுமா?

பெயரில்லா சொன்னது…

//அவரை பற்றி உங்களுக்கு முன்னதாகவே தெரியுமா?//

அவரை எனக்குத் தெரியாது; நீங்கள் எழுதியதைக்கொண்டு கருத்துச் சொன்னேன்.

Sathis Kumar சொன்னது…

மொந்தியும் லோகியும் இணைந்து நடத்தும் நகைச்சுவை கலக்கலாக இருக்கும்.. :)

மு.வேலன் சொன்னது…

யார் லோகி? அவர்களை பற்றி சிறிது கூறுங்களேன்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்,
மொந்தியின் நகைச்சுவை நன்று. சிரிக்க மட்டுமின்றி சிந்திக்கவும் வேண்டிய ஒன்று. ஆனால், ஒரு தமிழனாக இருந்துக்கொண்டு என்னால் இந்நகைச்சுவையைக் கேட்டுச் சிரிக்க முடியவில்லை. மாறாக வெட்கமும் அவமானமுமே மேலோங்கி நிற்கின்றன.பிற இனத்தவர்களிடம் இருக்கும் இனப்பற்றில் நூறில் ஒரு பங்குக்கூட நம்மிடையே இல்லை என்னும் உண்மையை அறியும் போது வருத்தமே மிஞ்சுகின்றது. இந்நகைச்சுவையைக் கேட்கும் போது சிரித்து மகிழ்வதற்குப் பதிலாக வாளொன்று இதயத்தை லேசாகக் கீறிச் செல்வதைப் போல் உணர்கிறேன்.

மு.வேலன் சொன்னது…

[து. பவனேஸ்வரி] கருத்துகளுக்கு நன்றி. கவலையை விடுங்கள். முன் இருந்த காலம் எப்படியோ, இனி வரும் காலம் வாளால் கீறிய உங்கள் இதயத்துக்கு மருந்தாக இருக்கும். ஆம், இது நம் காலம்; புதியதோர் உலகம் படைக்கும் காலம். பிற இனத்தவர்களிடம் இருக்கும் இனப்பற்றை நாம் வழிக்கொள்வோம்.
வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

யார் இந்த பரமேஸ்வரி... ரெகுலர் ரீடரா இருக்காங்களே

மு.வேலன் சொன்னது…

விக்கி, அவர் 'பரமேஸ்வரி' அல்ல, 'பவனேஸ்வரி'. பவனேஸ்வரி ஒரு எழுத்தாளினியும் கூட. அவரின் படைப்புகள் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வேலன்,
முன் இருந்த காலத்தைவிட வருங்காலத்தை நினைக்கும் பொழுதுதான் கவலை இன்னும் அதிகரிக்கிறது. உங்கள் கூற்றினைப் போல் இது நம் காலம்தான். இதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் நாம் இருப்பதோ 'கலிகாலம்'. நீங்களும் நானும் இன்னும் ஒரு சிலரும் மட்டும் சேர்ந்துப் புதிய உலகத்தினைப் படைத்திட முடியாது.நான் கீறிய இதயத்திற்கு மருந்துக் கேட்கவில்லை. இனி மேலும் கீறல் விழாமல் இருப்பதற்கு வழி கேட்கிறேன்.

விக்னேஸ்வரன் அவர்களுக்கு வணக்கம். எனது முழுப்பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். இப்பக்கத்திற்குப் புதிய வரவு. மொந்தியின் நகைச்சுவைப் பற்றிய தங்களது கருத்தை நான் அறிந்துக்கொள்ளலாமா?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அன்பின் து.பவனேஸ்வரி. உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றி. மெந்தியை பற்றி நான் நினைக்கவோ கருத்து தெரிவிக்கவோ எதுவும் இல்லை. எப்படி இறைமையை பல வடிவங்களில் காண்கிறார்களோ அதை போன்றதே மனிதனை பிரித்துப் பார்ப்பதும். இது போன்றவற்றில் எனக்கு உடன்பாடு குறைவு.

பிறகு ஒரு விடயம். எனது பழைய பதிவில் பின்னூட்டம் போட்டிருந்தீர்கள். அதில் நான் எழுதுவது கிடையாது. புதிய தள முகவரி http://vaazkaipayanam.blogspot.com/

பெயரில்லா சொன்னது…

வணக்கம் திரு. விக்னேஸ்வரன் அவர்களே. நீங்கள் எனது கேள்வியினைத் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் மொந்தி என்ற தனிமனிதனைப் பற்றிய கருத்தினைக் கேட்கவில்லை. மாறாக, திருமண விருந்தின் போது அவர் சொன்ன நகைச்சுவையைப் பற்றிய தங்களின் கருத்தினையே அறிய விரும்புகிறேன். புதிய முகவரி தந்தமைக்கு நன்றி. விரைவில் சந்திக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

@ து.பவனேஸ்வரி

அந்த நகைச்சுவைக்கான பதிலை தான் குறிப்பிட்டிருக்கிறேன்...

மு.வேலன் சொன்னது…

[VIKNESHWARAN] ஐயா, சற்று விளக்கமாகதான் கூறுங்களேன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் விக்னேஸ்வரன்,
தங்கள் பதிலில் தெளிவில்லை. இன்னும் விளக்கமாகக் கூற முடியுமா?