செவ்வாய், 4 நவம்பர், 2008

தமிழா! மலேசியப் பணத்தில் தமிழா?

ஆகஸ்டு 2008-ன் செம்பருத்தி மாத இதழில், மொழியின் முகங்கள் அங்கத்தில் 29, 30, 31-ஆம் பக்கங்களில் உருவான படைப்பை பார்த்தீர்களா நீங்கள்? நான் பார்த்தேன்; படித்தேன்; மலேசியாவுக்கு முன் மலாயாவில் தாய் தமிழுக்கு கிடைத்த உரிமையை உணர்ந்தேன்; அகம் நெகிழ்ந்தேன். ஆம், அருண், கிள்ளான் அவர்களின் படைப்பில் உருவான ‘மலேசியப் பணத்தில் தமிழ் எழுத்துகள்’ என்ற வரலாற்றுக் கட்டுரையை படித்து சிந்தித்தேன்.


தொடக்கக்கால மலேசியா, அதாவது மலாயாவில் பல்லின மக்களின் ஒற்றுமையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழ், சீனம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிட்ட பணத்தாட்கள் புழக்கத்தில் உள்ளதை இந்த கட்டுரை வழி அருண் அவர்கள் நன்றாக தெளிவிக்கின்றார்.

1935-ஆம் ஆண்டிலிருந்து 1938-ஆம் ஆண்டு வரை சுங்கை பூலோ தொழுநோயாளிகள் மட்டுமே பயன்படுத்த பணநோட்டுகள் வெளியிடப்பட்டிருக்கும் வியப்பான செய்தியும் இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றது.


தமிழ் மொழி இந்திய, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் நாணயங்களில் உரிமையாய் குடிக்கொண்டிருந்தாலும்; உண்மையான ஆசியா (Truly Asia) என்று மார்தட்டும் மலேசியர்களின் நாணயங்களில் தற்பொழுது தமிழ் எழுத்துக்கள் பொறிக்காததை நம் மண்டையைத் தட்டாமல் தட்டிச் சுட்டிக்காட்டியதற்கு அருணுக்கும் அவர் தம் கட்டுரைக்கும் மற்றும் மக்களின் விழிபுணர்வுக்கு பாடுப்படும் செம்பருத்திக்கும் தலைவணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்!
10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அக்கட்டுரையை ஏற்கெனவே படித்துள்ளேன்.

பணத்தில் தமிழ் இல்லை என்பதுபோல் தமிழரிடத்தில் பணம் இல்லை என்று எதிர்காலத்தில் ஆகிவிடக்கூடாது. இளைஞர்கள் பொருளீட்ட முயன்று உழைக்கவேண்டும்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சிறப்பாக உள்ளது நண்பரே...

பெயரில்லா சொன்னது…

good info...i just got to know about this..TQ

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் மு.வேலன்.

தங்களின் 'அரங்கேற்றத்தை' அன்போடு வரவேற்கிறேன்.

மலேசிய வலைப்பதிவு பூங்காவில் இணைந்துள்ள நீங்கள் பல புதுமைப் படைப்புகளை வழங்குவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.

தங்களின் வலைப்பதிவை விரைவில் என்னுடைய 'திருமன்றில்' நூலகத்தில் இணைப்பேன்.

இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்!

மு.வேலன் சொன்னது…

அனைவருக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

Interesting facts on "Money".

பெயரில்லா சொன்னது…

வணக்கம்,
மலேசியப் பணத்தில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது இதுவரையில் நான் அறியாத ஒன்று. தகவலுக்கு நன்றி.அன்று பல்லின மக்கள் புழங்கும் பணத்தில் கூட தமிழ் வாழ்ந்தது. இன்றோ, சொந்த வீட்டிலேயே தமிழ் உயிருக்குப் போராடுவது வேதனையை அளிக்கிறது.

மு.வேலன் சொன்னது…

[து. பவனேஸ்வரி] கருத்துக்கு நன்றி. அருமையான உங்கள் கருத்தில் ஒர் ஆதங்கம் தெரிகிறது. அது கூடிய விரைவில் நிரைவேறும். மலேசிய தமிழர்கள் இப்பொழுதுதான் விழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

vanakam,
porulaathara sandraaana nanayathilum tamil vaalntha sandru emmaku theriyum, aanal matra varuku eppadi poisheerum endra kelvi elluntha pothilthan umathu katturayai padithen. ithai patri ethenum madra thagavalgal veendum enil ennai thodarbukogga .nandri

மு.வேலன் சொன்னது…

சகோதரர் [premvasigaran] அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி.
இந்த தகவல்களை மக்களிடம் போய்ச் சேர்ப்பதற்குப் பாடுப்பட்டிருக்கும் செம்பருத்திக்கு நம் இந்தியர்கள் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறார்கள்.