ஆங்கில நாள்காட்டி படி இன்று நவம்பர் 6. 6 வருடங்களுக்கு முன்பு, 2002-ம் ஆண்டில் இதே நவம்பர் 6-ல் என் முதல் வெளியூர் பயணத்தை மேற்கொண்டேன். என் பெற்றோர்கள் திரு முனியாண்டி மற்றும் திருமதி சுப்பம்மாள் அவர்களின் ஆசியுடன், என் சித்தப்பா திரு இராஜாங்கம் மற்றும் சின்னம்மா திருமதி கோவிந்தமாள் அவர்களின் உதவியுடன் இந்தியாவில் உள்ள புண்ணிய திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பயனுற்றேன். என்றும் பசுமையாக இருக்கும் அந்நாட்களில் பிடிக்கப்பட்ட பல காட்சிகளில் சில...
(படத்தின் மேல் சொடுக்குங்கள்)
1. பினாங்கிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட சிங்கப்பூர் விமானம். இரவில்தான் சென்னையை அடைந்தோம்.
2. மறுநாள் காலை கண்விழித்து முதலில் சென்னையை பார்த்த முதல் காட்சி.
3. 1305 படிகட்டுகளை கொண்ட, சோலிங்கரில் அமைந்த யோக நரசிம்மர் ஆலயம்.
4. திரிவேணி சங்கமம்.
5. அலஹபாட்டில் நேரு அவர்களின் ‘ஆனந்த பவன்’ இல்லம்.
6. வாரநாசி கங்கை நதி.
7. சீர்காழியில் திருஞான சம்பந்தரின் இல்லம்.
8. பூம்புகாரில் கோவலன் கண்ணகி வாழ்ந்த கால கட்டத்தில் அமைந்திருந்த மாதிரி வீடு.
9. சிதம்பர நடராஜர் கோவிலின் தூண் மற்றும் ஓவியம்.
10. மதுரை மீனாட்சி அம்மன் ஆலய 1000ங்கால் மண்டபம்.
11. மதுரை நாயக்கர் மஹால்.
12. முக்கடல் சந்திப்பில் வள்ளுவரும் விவேகநந்தரும்.
13. தஞ்சை பெரிய கோவிலின் கல்வெட்டில் ஒன்று
14. வீரம் விதைக்கப்பட்ட மண்; கட்டமொம்மன் தூக்கிலிட்ட இடம்.
15. பொன் விளைக்கும் மங்கையர்கள்.
9 கருத்துகள்:
படங்கள் அருமை; முதற்படத்தைப்போல இன்னும் சில படங்களைச் சேர்த்திருக்கலாம்.
படங்களை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அது, சிதம்பரத்தில் பிடித்தது.
முதற்படம் என்று நான் சொன்னது இப்போது ஒன்பதாவது படமாக இருக்கிறது.
வரிசைப்படுத்திய முறை நன்று.
படங்களின் வரிசை, பயணங்களின் வரிசைபடியே. பயணித்த பல இடங்களில் சிலதான் இவை.
//புண்ணிய திருதலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பயனுற்றேன்.//
மேற்காணும் வரிகள் என் பார்வையில் சற்றே இடிக்கிறது...
படங்கள் அழகு...
படங்களனைத்தும் இந்தியாவிற்குச் செல்லத் தூண்டுகின்றன். உங்கள் இந்திய பயணம் குறித்து படங்களோடு சேர்த்து கட்டுரையாக வெளியிடுங்கள்.
இந்தியப் பயணம் மேற்கொள்பவர்கள் அங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களைப் பற்றி கூறினால் சிறப்பாக இருக்கும்.
[விக்கி] பல பயன்களில் குறிப்பாக சில...
1. தமிழ்நாட்டின் சூழ்நிலையை அருகிலேயே போய் பார்த்து அறிந்தது.
2. இந்திய மக்களின் வாழ்வியலை நேரடியாகவே கண்டு உணர்ந்தது.
3. சில்பசாஸ்திரத்தில் தமிழர்களின் திறமையைக் தெரிந்துக்கொண்டது.
4. கோவில்களின் பயன்பாடு.
5. இந்தியர்களின் உணவு முறை.
இப்படி பல...
[சதீசு குமார்] உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. இந்த பயணத்தில் சரியாக குறிப்பெடுக்கவில்லை. அடுத்த பயணத்தில் கண்டிப்பாக குறிபெடுக்கிறேன். நீங்கள் கூறியதுபோல் ஒரு பயணக் கட்டுரையை உருவாக்க வாழ்த்துங்கள்.
அனைவருக்கும் நன்றி.
வணக்கம்,
சிறிய சந்தேகம். இது நினைக்க நினைக்கும் நாளா அல்லது நினைக்க இனிக்கும் நாளா? மற்றபடி நிழற்படங்கள் அனைத்தும் நன்று. உங்களது பயண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுரை வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
[து. பவனேஸ்வரி] உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இது, நினைக்க நினைக்கும் இனிக்கும் நாள். படங்களுடன் கூடிய பயணக் கட்டுரையைப் படைக்க முயற்சி செய்கிறேன்.
கருத்துரையிடுக