திருஇந்திய எழுச்சி!
அன்று (25/11/2007) மலேசிய திருநாட்டின் சரித்திரத்தில் எழுதவேண்டிய நன்னாள்; இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது அந்த எழுச்சி நாள். உலகமே வியந்து அதிர்ந்த நாள். 50 வருட மலேசிய அரசியல் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட சரித்திர நாள். பல நூராயிரம் மலேசிய இந்தியர்கள் ஒற்றுமையாக உரிமைக் குரல் எழுப்பிய பொன்னாள்!
இந்நாளை நினைத்துப்பார்க்கையில் அன்று மகாகவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளுவில் 5-வது சரணம் மனதைத் துளைத்தது...

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமைசெய்யோம் – பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
இந்த எழுச்சிக்கு வித்திட்ட ஐம்பெரும் காவிய மன்னர்களுக்கு இன்றும் சிறைவாசம். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
9 கருத்துகள்:
மிக மிகப் பொருத்தமான பாடல்; பாரதியின் தேசியப் பாடல்களுள் பல நமக்கும் பொருந்தும்.
http://www.thestar.com.my/news/story.asp?file=/2008/11/25/nation/2634123&sec=nation
வணக்கம் வேலன்,
நல்ல பதிவு. நீங்கள் இதனை இந்தியர்களின் எழுச்சி என்கிறீர்கள். ஆனால், இன்னும் சிலர் அதனை இந்தியர்களின் சரித்திரத்தில் விழுந்த கருப்புப்புள்ளியாக எண்ணுகிறார்களே?
http://pokkisham.blogspot.com.
இப்பதிவைப் பார்க்கவும்...
இந்த எழுச்சி பல நன்மைகளை விளைவித்திருந்தாலும் பல பின்விளைவுகளையும் விளைவித்திருக்கின்றது. இந்த பின்விளைவுகளால் பாதித்த பலரில் இவரும் ஒருவராகும் என்று நான் கருதுகிறேன்.
எது எப்படியோ, முன் வைத்த காலை பின்வைப்பதற்கு வாய்பே இல்லை! 50 வருடத்தில் இழந்தது உரிமையை, அடுத்து இழப்பதற்கு வேரெதுவுமில்லை, இனத்தை தவிர! கவனம்!
//இந்த எழுச்சி பல நன்மைகளை விளைவித்திருந்தாலும் பல பின்விளைவுகளையும் விளைவித்திருக்கின்றது.//
ஒன்றைப் பெற வேண்டுமாயின் வேரொன்றை இழக்கத்தான் வேண்டும் என்ற இயற்கையின் விதிப்படி இந்தப் போராட்டத்தின் சில பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ள நாம் துணிந்திருக்க வேண்டும். அவை நம்மேல் விழுந்த விழுப்புண்கள்!!
//எது எப்படியோ, முன் வைத்த காலை பின்வைப்பதற்கு வாய்பே இல்லை!//
இந்த நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் நமது வெற்றிகள் வெகுதொலைவில்லை!!
வணக்கம் மு.வேலன்.
தங்களின் 'அரங்கேற்றத்தை' என்னுடைய திருமன்றில் திரட்டியில் அரங்கேற்றம் செய்துள்ளேன்.
பார்க்கவும்.
இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்!
[பிளாகர் சுப.நற்குணன் - மலேசியா] மிக்க நன்றி.
cha....can translate into english ah?
[Ghost Particle] Call me. will explain to you in english.
கருத்துரையிடுக