14/11/2008, இந்திய நேரப்படி சரியாக இரவு மணி 8.31, இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியைச் சுமந்த வண்ணம் மூன் இம்பாக்ட் பிராப் (MIP - Moon Impact Probe) வெற்றிகரமாக நிலவின் தரையில் இறங்கியது. சந்திரயான்-1லிருந்து இரவு 8.06 மணிக்கு மூன் இம்பாக்ட் பிராப்பை கழற்றி விடப்பட்டு, 25 நிமிட பயணத்தில் அக்கருவி நிலவின் மேற்பரப்பை அடைந்து சில படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. 1962-ம் ஆண்டில், முதலாவது இந்தியப் பிரதமராகிய ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய விண்வெளித் திட்டத்தை நினைவுக்கூறும் வகையில், அவரின் பிறந்தநாளன்றே நிகழ்த்தப்பட்ட ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனை. வாழ்த்துக்கள்!
மூன் இம்பாக்ட் பிராப்பால் எடுக்கப்பட்ட படங்கள்:
http://www.isro.org/pslv-c11/photos/moon_images.htm
மேல் விபரங்களுக்கு:
http://www.isro.org/pressrelease/Nov14_2008.htm
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2272&cls=row4
3 கருத்துகள்:
ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் தத்தம் தேசியக் கொடியுடன் நிலவில் இறங்கியுள்ளன. இப்போது நான்காவதாக இந்தியா.
ஆசிய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.
வணக்கம்,
இரண்டாவது நிழற்படத்தில் காலடித்தடம் தெரிவதுபோல் உள்ளதே?
[அ.நம்பி] நீங்கள் சொல்வது உண்மை. ஆசிய நாடுகளில், ஜப்பானை அடுத்து இந்தியாதான் தேசியக் கொடியை இறக்கியுள்ளது; அடுத்து மனிதனையும் இறக்கவுள்ளது.
[து. பவனேஸ்வரி] பார்க்க அப்படி இருக்கிறது ஆனால், அது மேடு பள்ளமான நிலவின் தரை. நுணுக்கமான உங்கள் பார்வை போற்றத்தக்கது.
இன்றைய தினமலரில் விஞ்ஞானி அண்ணாதுரையைப் பற்றிய தகவல்
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2291&cls=row3
கருத்துரையிடுக