புதன், 14 ஜனவரி, 2009

பொங்கல் வாழ்த்துக்கள்!

பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!


இந்த இன்ப கூச்சல் தைப்பொங்கலில் மட்டுமல்ல, சிறு வயதில் ஒவ்வொரு முறையும் மதிய உணவுக்கு அம்மா சோற்றை பொங்க வைப்பதை பார்த்த போதெல்லாம் நான் துதித்தது இந்த தாரக மந்திரத்தையே.

அன்று எனக்கு தினம் தினம் பொங்கல் திருவிழா. இன்று அதை நினைக்கும் பொழுது, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீட்ட சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் ‘வாழ்வே தவம்’ என்ற புத்தகத்திலிருந்து ‘இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற கட்டுரை நினைவிற்கு வருகிறது.

அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள் பின்வருமாறு:

...நாட்கள் எப்படித் தன்னை தினம் தினம் புதுப்பித்துக் கொள்கின்றனவோ, வருடம் எப்படி தன்னை வருடா வருடம் பிறப்பித்துக்கொள்கின்றதோ, நாமும் தினம் தினம் இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம் என்ற பாரதியார் உற்சாகத்தில் நம்மை நாம் புதுபித்துக்கொண்டால் இந்த வாழ்க்கை தினம் தினம் திருவிழாதான்.

அன்று என் பாலிய பருவத்தில் அர்தமின்றி தினம் தினம் கொண்டாடிய திருவிழாவின் மகத்துவத்தை இன்று இளைய பருவத்தில் அர்த்தத்துடன் உணர்ந்துக் கொண்டேன்.

பொங்கல் வாழ்த்துக்கள்!

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

//அன்று என் பாலிய பருவத்தில் அர்தமின்றி தினம் தினம் கொண்டாடிய திருவிழாவின் மகத்துவத்தை இன்று இளைய பருவத்தில் அர்த்தத்துடன் உணர்ந்துக் கொண்டேன்.//

இதுதான் உண்மை.இனிக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்க நாங்க படித்தறிய.

மு.வேலன் சொன்னது…

[ஹேமா] இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. வாழ்க வளமுடன்!

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
மிகவும் இயல்பான பதிவு. மீண்டும் மீண்டும் நம்மை நாம் புதுப்பித்துக்கொள்வோம். பொங்கல் வாழ்த்துக்கள்.

மு.வேலன் சொன்னது…

[து. பவனேஸ்வரி] நன்றி. பொங்கலோ பொங்கல்!

A N A N T H E N சொன்னது…

//நாமும் தினம் தினம் இன்று நாம் புதிதாய்ப் பிறந்தோம் //

நல்ல வரிகள், பகிர்ந்துக் கொண்டதுக்கு நன்றி

அன்றாடம் பிறந்தநாள் கொண்டாடப் போறேன்... தினம் ஒருத்தர் கேக் ஸ்பான்சர் செய்யனும்

மு.வேலன் சொன்னது…

[A N A N T H E N] நன்றி.

//அன்றாடம் பிறந்தநாள் கொண்டாடப் போறேன்...//

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

A N A N T H E N சொன்னது…

//பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//
இன்னிக்கி நீங்க சொல்லிட்டீங்க, நாளைக்கு யாரு சொல்லுவா?

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்