நேற்றுதான் (5/1/2009) கடந்த மாத (டிசம்பர்) சம்பளச் சீட்டு (Pay Slip) எனக்கு கிடைக்கப்பெற்றேன். கிடைத்ததும் அதை என் அலுவலக மேசைமீது இருந்த ஒரு புத்தகத்தின் இடுக்கில் வைத்தேன். இன்று அந்த சம்பளச் சீட்டை எடுக்கையில் அந்த புத்தகத்திலிருந்த சில பக்கங்கள் எதேர்ச்சையாகத் திரும்பி கீழ்கண்ட குறிப்பை மீண்டும் ஞாபகப்படுத்தியது.
“தமிழில் அரிசிக்கு (நெல்) சம்பா என்று ஒரு பெயர் உண்டு. சீரகச் சம்பா என்று ஒருவகை அரிசியின் பெயர் கேள்விப் பட்டிருக்கலாம். இப்படி நெல் தான் உழைப்பவருக்கு, வேலை செய்பவருக்குக் கூலியாகத் தரப்பட்டது. அளம் என்ற சொல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் குறிக்கும். உப்பு+அளம்=உப்பளம். அவரவர்க்கான கூலிக்கான நெல்லைக் குவியல் குவியலாகக் குவித்து வைக்கும்போது அந்தப் பகுதி சம்பா+அளம் என்று சுட்டப்படும். அது உங்கள் சம்பா அளம். இது உங்கள் சம்பா அளம் என்று நெற்குவியலைச் சுட்டியதால் சம்பளம் என்ற சொல் பிறந்திருக்க வேண்டும்.”
'சொன்னார்கள் சொன்னார்கள் பாகம்-1' என்ற புத்தகத்திலிருந்து, 165-வது பக்கத்தில் சுகி.சிவம் அவர்களால் குறிப்பிடப்பட்டது.

11 கருத்துகள்:
நல்ல தகவல் அறிய தந்தமைக்கு நன்றி...
[VIKNESHWARAN] மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்
பகிர்வுக்கு நன்றி ...
அருமையான தகவல்
நானே இதைப் பற்றி
பதிவு இட இருந்தேன்
வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
திகழ்
[நட்புடன் ஜமால்] மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!
[திகழ்மிளிர்] //அருமையான தகவல்
நானே இதைப் பற்றி பதிவு இட இருந்தேன்//
மேல் விபரங்களோடு நீங்களும் பதிவிடலாமே?
நன்றி.
nalla thagaval. ithu varai intha vishayam theriyathu.
[சுபாஷினி] வருக, வருக. மகிழ்ச்சி.
வணக்கம் வேலன் இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்.நிறையவே புதிய தகவலகள்.சம்பளம் என்று 10 வருடமாக கையில் வாங்கிக்
கொண்டாலும் இனித்தான் அதன் விளக்கத்தோடு வாங்கப்போகிறேன்.
இனிச் சம்பளம் வரும்போதெல்லாம் உங்கள் விளக்கத்தின் ஞாபகம் கண்டிப்பாய் வந்துபோகும்.மிக்க நன்றி.
//உப்பு+அளம்=உப்பளம்//
இத வெச்சி நான் ஒன்னு சொல்லுவேனுல்ல...
"அப்பு+அளம்=அப்பளம்"
ஐயயோ... யாரது என்னை "அப்ப" வர்ரது... எஸ்கேப் :D
நல்ல தகவல் மு.வேலன், நன்றி
[ஹேமா] உங்கள் முதல் வருகையை வரவேற்பதில் மகிழ்ச்சி. இந்த தளத்தில் பயன் அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
[A N A N T H E N] வரவேற்கிறேன் அன்பரே. உங்கள் கருத்துரை உங்கள் பெயர்போல் ஆனந்தமளிக்கிறது.
//இத வெச்சி நான் ஒன்னு சொல்லுவேனுல்ல...//
ஒன்னு என்ன, இரண்டு மூன்றுன்னு கூட சொல்லலாமே...
நன்றி.
"அது உங்கள் சம்பா அளம். இது உங்கள் சம்பா அளம் என்று நெற்குவியலைச் சுட்டியதால் சம்பளம் என்ற சொல் பிறந்திருக்க வேண்டும்.”
நல்ல விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றி வேலன் :)
கருத்துரையிடுக