புதன், 22 ஆகஸ்ட், 2012

கர்ணன்

நேற்று (21/08/2012), லோட்டஸ் பிஜே ஸ்தேட் திரையரங்கில் கர்ணன் பார்த்தேன். மலை 5.55 காட்சிக்கு அரங்கம் பாதி நிறைந்திருந்த்து. பழைய பிரதியை மீண்டும் கணினி மூலம் புதுபித்த மூன்று மணி நேர படம். இதை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பாலும் இளையோர்கள். 48 வருடங்கள் கடந்தும் இந்த படத்திற்கு இன்றும் மக்கள் கொடுக்கும் ஆதரவை நினைத்து மகிழ்ச்சி கொண்டேன்.

மகாபாரதத்தில் கர்ணனே கர்ம யோகியாக கீதை சாட்சிப்படுத்துகிறது. இந்த படம், அந்த கர்ம யோகியை நம் முன் உயிர்க்கொடுத்து காட்சிப்படுத்துகிறது. கர்ணனின் பிறப்பிலிருந்து மரணம் வரை அவனைப் பற்றி எவ்வளது துள்ளியமாக காட்ட முடியுமோ அவ்வளவு சிரத்தையுடன் காட்டியுள்ளார் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பி. ஆர். பந்தலு.


நீண்ட இடைவெளிக்கு பின் பார்த்த முழு நீள செந்தம்மிழ் திரைப்படம் கர்ணம். மகிழ்ச்சி.


Karnan (film)
கர்ணன் (மகாபாரதம்)

1 கருத்து:

A N A N T H E N சொன்னது…

நானும் பார்த்தேன். உங்களைப்போல முழுமையாக ரசிக்க முடியவில்லை.
அதே படம். அதே கலர். இசை மட்டும் மேற்கொண்டு நுழைத்து உள்ளனர். கொஞ்சம் நீளமான படம் என்பதால் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து பார்க்க முடியவில்லை.

ரசித்த காட்சி: சிவாஜி விளையாட்டு போக்காக சாவித்திரியை இழுக்க மணிகள் கொட்ட அங்கே அசோகன் வர.... மிக முதிர்ச்சியான காட்சி அமைப்பு....
அடுத்ததாக... படத்தின் இறுதியில் வரும் பாடல்.... உள்ளத்தில் நல்ல உள்ளம்... -

படம் முழுக்க வரும் இலக்கிய/கவிதை தமிழ் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இந்த புதிய பிரதியில் அதற்கு இணையான ஆங்கில மொழி பெயர்ப்பு நல்ல முயற்சி...