வியாழன், 2 டிசம்பர், 2010

"2012" - தமிழ் மேடை நாடகம்

நேற்று (1/12/2010) தாமான் புடாயாவில் நடைபெற்ற எஸ். டி. பாலாவின் “2012” தமிழ் மேடை நாடகத்திற்கு என் நண்பருடன் சென்றிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இரசித்த நிகழ்ச்சி இது.


இருபது ரிங்கிட் நுழைவு சீட்டில் உள்ளே புகுந்து அமர்ந்தோம். நேற்று முதல் காட்சிக்கு எங்களையும் சேர்த்து சுமார் 35 இரசிகர்கள் இருந்திருப்பார்கள். சரியாக 8.31-க்கு நாடகம் தொடங்கி 10.30-க்கு முடிவுற்றது.


இதுவரை எஸ். டி. பாலாவின் நாடகங்களில் அவர் திரைக்கு பின்னால் செயலாற்றிதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால், நேற்றுதான் நான் அவரை முதல் முதலாக திரைக்கு முன்; மேடையில் பார்க்க முடிந்தது. ஆம், அவர்தான் அறிவழகன்.

இந்த நூற்றாண்டில் நடக்கும் சமூதாய ஒழுக்கியல் மீறல்களை சகித்துக் கொள்ள முடியாத அறிவழகன் அவைகளை அனுசரித்துக்கொள்ளவும் தயாராக இல்லை. இந்த மன அழுத்தத்தில் தள்ளப்பட்டு அவன் அபாரமாக எதிர்வினையாற்றுகிறான்; அதன் பின் விளைவுகளையும் எதிர்க்கொள்கிறான்.

அப்படி என்ன மன உளைச்சல் அறிவழகனுக்கு? அவன் செய்தது சரியா?
இந்த கேள்விகளுக்கு விடை நாகர்த்தும் உச்சமே “2012”.

இந்த நாடகத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்கின்றன. அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள்!

எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்.

5 கருத்துகள்:

Yuvarajan subramaniam சொன்னது…

///எஸ். டி. பாலாவின் திறைமையான படைப்புகளில் இதுவும் ஒன்றாக நான் கருதுகிறேன்./// - திறமையான பகிர்வு - வாழ்த்துக்கள்.

கே.பாலமுருகன் சொன்னது…

நீங்கள் 2012 மேடை நாடகத்தின் கதை, எனக்கு அந்நியனையும், மாதவன் நடித்த எனக்குள் ஒருவன் எனும் படத்தையும் ஞாபகப்படுத்துகிறது. சமூகத்தின் பொதுவான அறத்திற்கு அப்பார்ப்பட்டு நிகழும் மீறல்களையும் நேர்மையற்றதனத்தையும் சகித்துக் கொள்ள முடியாமல், அதனை நோக்கி கோபம் கொள்வதே மாதவனின் கதைப்பாத்திரம் செய்தது.

மு.வேலன் சொன்னது…

[yuvarajan] உங்களின் திறமையான வாழ்த்துகளுக்கு நன்றி!

[கே.பாலமுருகன்] நீங்களும் உங்களை போன்ற இந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களும் இம்மாதிரியான மலேசியத் தமிழ் மேடை நாடகங்களைப் பார்த்து உங்கள் கருத்துகளை நம் மக்கள் முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது கருத்துப் பரிமாற்றங்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி.

பெயரில்லா சொன்னது…

டிக்கெட் வாங்கி கொடுத்தா நானும் போவேன்ல்ல :)

மு.வேலன் சொன்னது…

[இனியவள் புனிதா] ...எல்லாம் முடிந்த பிறகு கேட்டால் எப்படி? இருந்தாலும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். அடுத்த நாடகத்திற்கு பார்ப்போம் :)