புதன், 4 மார்ச், 2009

இருவர் 2 – தமிழ் மேடை நாடகம்


பல மாதங்களாக காத்திருந்த இந்த தமிழ் மேடை நாடகத்தை காண முதல் காட்சிக்கு பசியையும் பொருட்படுத்தாமல் அலுவல் முடிந்ததும் என் நண்பர்களுடன் நேற்றிரவு (03/03/2009) இஸ்தானா புடாயாவிற்கு (Istana Budaya) சிட்டுக் குருவியாய் பறந்தேன். இரவு 8.31-க்கு தொடங்கிய நாடகத்தை, கடுமையான வாகன நெரிசலின் காரணமாக சற்று தாமதமாக ஏறக்குறைய இரவு 8.45-லிருந்துதான் பார்க்க நேர்ந்தது. முப்பது வெள்ளி நுழைச்சீட்டில் முப்புற இருக்கையில் தெளிவாக காட்சிகளைக் காணும்படி அமைந்த அமர்வு மகிழ்ச்சி.


2004-ஆம் ஆண்டு அறங்கேறிய இருவர், மலேசியாவிலும் தமிழகத்திலும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிப் படைப்பு. மலேசிய நாட்டில் முதல் முறையாக இருவர்களை மட்டுமே தாங்கிய மேடை நாடகம் என்று மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெற்று சாதனை படைத்தது இந்த ‘இருவர்’.

இந்த சாதனைகளுக்கு ஆதாரமான இந்த நூற்றாண்டின் மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த ஒரு புதையல் இயக்குனர் எஸ். டி. பாலா; அவர்களின் மற்றொரு சிறந்த படைப்புதான் இந்த ‘இருவர் 2’ தமிழ் மேடை நாடகம். இது 2009-ஆம் ஆண்டின் இவரின் முதல் படைப்பாக மலர்ந்தாலும், தமிழ் மேடை நாடகங்களில் இது இவரின் 20-வது படைப்பு.


மலேசிய திருநாட்டு தமிழ் மேடை நாடகத்தின் அழிவை உயிர்பித்த இந்த சாதாரண மனிதனின் சாதனை பல. எல்லாம் மேடை நாடகத்தினாலேயே தேடி வந்தது. தமிழகத்தையே பேச வைத்த இவரின் இருவர், இயக்குனர் சிகரம் பாலசந்தரையே மனதார பாராட்ட வைத்ததுதான் குறிப்பிடத்தக்கது.

ஒரு குடும்பத் தலைவனுக்கும் குடும்பத் தலைவிக்கும் ஏற்படும் கருத்துவேறுபாட்டின் விளைவுகளை மையமாக வைத்து நகர்த்திய கதை, இருவர் 2. சுமார் இரண்டு மணி நேரங்கள் தோய்வில்லாமல் நகர்ந்த இந்த நாடகம் என் பசியையும் மறக்கவைத்தது. மிகவும் சிறப்பாக இரசிக்கும்படியாக இந்த நாடகம் அமைந்தற்கு கூடியிருந்த நாற்பது இரசிகர்களின் கைத்தட்டலே சாட்சி. அதைவிட, இரசிகர்களாகிய நாங்கள் அனைவரும் இறுதிவரை கவனச்சிதறல் இல்லாமல் அரங்கிலேயே கட்டுண்டு கிடந்தது மற்றுமொரு சாட்சி.

இந்த தரமான படைப்புக்கு எஸ். டி. பாலாவிற்கும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்! குறிப்பாக இந்த மேடைநாடகத்தின் கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுத்து வாழ்ந்து காட்டிய, வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!


http://www.nst.com.my/Current_News/NST/Monday/Features/20090301191957/Article/indexF_html

http://kanaigal.blogspot.com/2009/02/11_19.html

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பாராட்டுக்கள் எஸ்.டி. பாலாவிற்கும் பங்கேற்ற அனைத்து மேடைக் கலைஞர்களுக்கும் :-)

பெயரில்லா சொன்னது…

வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்.உங்களுடைய கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. உங்களது சமூகத் தொண்டையும் தமிழ்ப்பற்றையும் கண்டு வியக்கிறேன். உங்களைப் போல எல்லா இளைஞர்களும் நேரத்தை நல் வழியில் செலவழித்தல் நமது சமூகம் உருப்படும். தொடர்ந்து எழுதுக. வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்,
மங்கை

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வேலன். உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்களுடைய கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.





என்றும் அன்புடன்,
மங்கை

தமிழ்மாறன் சொன்னது…

மேடை நாடகங்கள் அருகி வரும் இக்காலச் சூழலில் அவற்றிற்ற்குப் புத்துயிர் அளித்து வரும் நமது கலைஞர் எஸ்.டி.பாலாவுக்கு புகழாரம் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இன்றும் நாடகம் சமூக வாழ்வியலை தெளிவுடன் உணர்த்த சிறந்த ஊடகம் என்பதை உணர்த்திய படைப்பாளருக்கும் ஊக்கப்படுத்திய தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.நன்றி

தமிழ்மாறன் சொன்னது…

மேடை நாடகங்கள் அருகி வரும் இக்காலச் சூழலில் அவற்றிற்ற்குப் புத்துயிர் அளித்து வரும் நமது கலைஞர் எஸ்.டி.பாலாவுக்கு புகழாரம் செய்திருப்பது பாராட்டுக்குரியது. இன்றும் நாடகம் சமூக வாழ்வியலை தெளிவுடன் உணர்த்த சிறந்த ஊடகம் என்பதை உணர்த்திய படைப்பாளருக்கும் ஊக்கப்படுத்திய தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.நன்றி

sivanes சொன்னது…

இருவர் நாடகம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது, அந்த இரு கதாபாத்திரங்களையும் இய‌க்கிய‌ இய‌க்குன‌ர் பாலா அவ‌ர்க‌ளுக்கும், அந்நிக‌ழ்வை மிக‌வும் சிற‌ப்பாக‌ ப‌திவிட்டிருக்கும் உங்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்

Sathis Kumar சொன்னது…

வணக்கம் வேலன்,

என்ன பல மாதங்களாக வலையுலகப் பக்கம் உங்களை காண முடியவில்லையே.. வேலைப் பளு அதிகமோ..?

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..